ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவும் அமெரிக்கா!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (14:03 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்புகிறது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இதையடுத்து, யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ அமெரிக்கா போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பும் முடிவை எடுத்துள்ளது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் சிலரைக் கொன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதாக பென்டகன் கூறுகிறது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மைக்கு அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தகவல்படி, யுஎஸ்எஸ் கோல் என்ற ஏவுகணை அழிக்கும் கப்பலை அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அனுப்புகிறது. இது அங்குள்ள கடற்படையுடன் இணைந்து செயல்படும். கடந்த மாதம், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்