உலகத்தின் மிக நீளமான மின்னல்!? – ஐநா சபை தகவல்!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:36 IST)
அமெரிக்காவில் ஏற்பட்ட மின்னல் இதுவரை கண்டறியப்பட்ட மின்னல்களில் மிக நீளமானது என ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் தோன்றிய மின்னலானது இதுவரை பதிவு செய்யப்பட்ட மின்னல்களில் மிகவும் நீளமானது என ஐநா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தொடங்கி லூசியானா, டெக்சாஸ் வரை இந்த மின்னல் காணப்பட்டுள்ளது.

இந்த மின்னலின் நீளம் 770 கிலோ மீட்டர் என பதிவாகியுள்ளது. கடந்த 2018ல் பிரேசிலில் தோன்றிய மின்னலை விட இது 60 கிலோ மீட்டர் தூரம் அதிக நீளம் கொண்டது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகர் வரையிலான தூரத்திற்கு சமமானது என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்