கொரோனா வைரஸ்: பலத்த அடிவாங்கிய அமெரிக்க பொருளாதாரம்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (16:34 IST)
அமெரிக்க பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.
 
அமெரிக்காவில் 53,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 700 பேர் இறந்துள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.
 
தொழில்கள், பள்ளிகள், விளையாட்டு நிகழ்வுகள் என அனைத்தும் மூடப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பங்கு சந்தைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.
 
"இது போன்ற ஒரு நிலையை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை... இது நெருக்கடி காலம்" என்று முதலீட்டாளர் ரே டாலியோ சி.என்.பி.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். 
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களுக்கு 4 டிரில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று ரே டாலியோ கணக்கிடுகிறார். மேலும் பலரும் இதனால் பணமின்றி தவிப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
 
ஆனால் பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் சில முன்னறிவிப்புகளை பார்த்தால், இதன் தாக்கத்தின் அளவு மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 
கோல்ட்மேன் சாக்ஸின் பொருளாதார வல்லுநர்கள் கூர்மையான மந்தநிலையை கணித்துள்ளனர். முதல் காலாண்டில் 6% சரிவுக்குப் பிறகு, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24% வீழ்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக் கூடியவகையாக இருக்கிறது.
 
இந்நிலையில் ஜே.பி மோர்கன் நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்ததில், அமெரிக்க பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 14% சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து வரும் வாரங்களில் வேலைவாய்ப்பின்மை 4 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று மார்ச் 23ஆம் தேதி நடத்தப்பட்ட மதிப்பீட்டில் ஜே.பி மார்கன் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மைக்கெல் ஃபெரோலி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்