69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டறிந்த 12 வயது சிறுவன்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:57 IST)
12 வயது சிறுவன் ஒருவன் 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டறிந்துள்ளான்.

 
விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் ஆல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றான் அப்போதுதான் அவன், பாறைகளின் இடுக்குகளிலிருந்து எலும்புகள் நீட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தான்.
 
வியாழக்கிழமையன்று இந்த எலும்புக்கூட்டைத் தோண்டி எடுக்கும் நிறைவடைந்தது. அந்த சிறுவனின் பெயர் நாதன் ருஷ்கின். தான் முதன்முதலில் அந்த எலும்புகளைக் கண்டவுடன் அதிர்ச்சியில் பேச்சற்று போனதாக தெரிவிக்கிறான் நாதன்.
 
"நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் நின்றிருந்தேன். டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டறிந்துள்ளேன் என்பது குறித்து யோசிக்கும்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்தேன்," என பிபிசியிடம் தெரிவித்தான் நாதன்.
 
டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான ஆல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு.
 
ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு புதைபடிமங்களைக் கண்டுள்ளனர். இருப்பினும் அது மேலே இருக்கும் பாறைகளிலிருந்து விழுந்திருக்கும் என நாதனின் தந்தை நினைத்துள்ளார்.
 
எனவே அதை நினைவில் வைத்திருந்த நாதன் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அங்குச் சென்று அதை ஆராய்ந்துள்ளான். அந்த எலும்புகள் பாறையைத் தாண்டி வளர்ந்திருந்தது. அப்பா நீங்கள் இங்கே சீக்கிரம் வாருங்கள் என நாதன் குரல் எழுப்பியதிலிருந்து அவன் எதையோ கண்டறிந்துவிட்டான் என அவரின் தந்தைக்குப் புரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்