அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:29 IST)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - பஞசம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

06-10-2024 அன்று புதன் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024  அன்று சூர்யன் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். கொடுத்த வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்.

இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  எதையும்  நிர்ணயிக்கும் திறன் குறையும். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும்.

மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது  வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே  மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன்  நடந்து கொள்வது நல்ல பலன் தரும்.  

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை குறையும்.  அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை  தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை  நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க குடும்ப  பிரச்சனை கள் தீரும். மனகவலை அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்