அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:15 IST)
கிரகநிலை:
பஞசம ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
06-10-2024 அன்று புதன் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024 அன்று சூர்யன் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  

 
பலன்:
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் அதே வேளையில் திட்டமிட்டு சாதித்தே காட்டும் பிடிவாதமும் கொண்ட துலா ராசியினரே

இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். உங்கள் வாக்குவன்மையில் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: ”ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என 11 முறை சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்