’தண்ணீருக்காக கொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை’ - ஒரு நாட்டின் நிலை

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (14:27 IST)
தண்ணீர் பிடிக்க மக்களுக்கிடையில் சண்டை ஏற்படுகிறது. தண்ணீருக்காக யாரையாவது ஒருவர் கொலை செய்து விட்டாலும் ஆச்சரியமில்லை என்னும் அளவிற்கு எகிப்து நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
 

 
ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப்பகுதியில் எகிப்து உள்ளது. இதன் தெற்குப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காத நிலையில் எகிப்தின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
ரமலான் மாதம் என்பதால் நோன்புக்குப் பிறகு தண்ணீர் அருந்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும். அதற்குத் தண்ணீர் கிடைப்பதில்லை என்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்ட வடிவங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
 
கடந்த எட்டு ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியைச் சந்தித்ததில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இது பற்றிக் கருத்துக் கூறுகையில், ”தண்ணீரின்றி எங்கள் குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. ஆனால் அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பொறுப்பில் உள்ள அனைவரிடமும புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரையில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று சொல்கின்றனர்.
 
போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ள ஒருவர் பேசுகையில், ”தண்ணீர் கொண்டு வரும் வண்டிகள் எப்போதாவதுதான் வருகின்றன. இதனால் தண்ணீர் பிடிக்க மக்களுக்கிடையில் சண்டை ஏற்படுகிறது. தண்ணீருக்காக யாரையாவது ஒருவர் கொலை செய்து விட்டாலும் ஆச்சரியமில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்