மருத்துவம் சார்ந்த தவறான வீடியோக்களை நீக்கம்: யூடியூப் அதிரடி முடிவு..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (13:25 IST)
மருத்துவம் சார்ந்த தவறான தகவல்களை தரும் வீடியோக்களை நீக்க யூடியூப் அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும் என்றும் கதிரியக்க சிகிச்சைக்கு பதில் வைட்டமின் சி எடுக்கலாம் என்றும் பல காணொளிகள் யூடியூபில் உள்ளன. இதுபோன்ற தவறான சிகிச்சை தரும் காணொளிகளை நீக்க வேண்டும் என யூடியூப் நிர்வாகத்திற்கு பல கோரிக்கைகள் வந்துள்ளது.
 
இந்த நிலையில் தற்போது யூடியூப் அதிரடியாக இதுபோன்ற வீடியோக்களை நீக்க முடிவு எடுத்துள்ளது. மருத்துவம் சார்ந்த தவறான தகவல் தருவதை தடுக்க, வழிகாட்டி நெறிமுறைகளை யூடியூப் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
விரைவில் தவறான மருத்துவம் தரும் யூடியூப் வீடியோக்களை நீக்கவும் யூடியூப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்