பழைய ரஜினி படத்துக்கு எடுத்த பப்ளிக் ரிவியூ?? புளூ சட்டை மாறன்

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த  நிலையில், ஜெயிலர் படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று காலையிலேயே இப்படத்தின் ரிவியூக்கள் என்ற பெயரில், சில யுடியூப்களில் மக்களிடம் இப்படத்திற்கு ரிவியூ எடுத்ததாகக் கூறிச் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிரபல சினிமா விமர்சகர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’உருட்டு 1:

தமிழ்நாட்ல முதல் ஷோ 9 மணிக்குதான். படம் ரெண்டே முக்கா மணிநேரத்துக்கு மேல ஓடும். கால் மணிநேரம் இடைவேளை. ஆக... 12 மணிக்கு முன்னாடி பப்ளிக் ரிவியூ எடுக்கவே முடியாது.

ஆனா இந்த யூட்யூப் சேனலுங்களை பாத்தீங்களா? பழைய ரஜினி படத்துக்கு எடுத்த பப்ளிக் ரிவியூவை எல்லாம் எடிட் பண்ணி ஜெயிலர் விமர்சனம்னு பச்சையா பொய் சொல்லுறாங்க.

அடுத்த உருட்டு:

FDFS Collection 50 கோடி. நாளைக்கி காலைல வந்துடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

உருட்டு 1:

தமிழ்நாட்ல முதல் ஷோ 9 மணிக்குதான். படம் ரெண்டே முக்கா மணிநேரத்துக்கு மேல ஓடும். கால் மணிநேரம் இடைவேளை. ஆக... 12 மணிக்கு முன்னாடி பப்ளிக் ரிவியூ எடுக்கவே முடியாது.

ஆனா இந்த யூட்யூப் சேனலுங்களை பாத்தீங்களா? பழைய ரஜினி படத்துக்கு எடுத்த பப்ளிக் ரிவியூவை எல்லாம் எடிட்… pic.twitter.com/sNCe8hlNCs

— Blue Sattai Maran (@tamiltalkies) August 10, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்