யூடியூபில் அறிமுகமாகியுள்ள 3 புதிய அம்சங்கள் அறிமுகம்! பயனர்கள் மகிழ்ச்சி..!

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (17:32 IST)
யூடியூபில்  மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்த மூன்று முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. யூடியூபில் ஒளிபரப்பாகும் விடியோக்களின் வேகத்தை துல்லியமாக மாற்றலாம்.. முன்னதாக, வேகத்தை 0.25 புள்ளி குறைக்க முடிந்தால், தற்போது அதை 0.05 புள்ளி வரை குறைக்கலாம். வேகத்தை 2x வரை அதிகரிக்கவும் முடியும்.

2. "ஸ்லீப்பர் டைம்" வசதி. இது, 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கிறது. பயனர்கள் இந்த நேரத்தைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

3. செல்போனை குறுக்குவெட்டாக (portrait mode) பயன்படுத்தும்போது, முழுத் திரையில் இருந்தபடியே பிரவுஸிங் செய்ய முடியும். இது தற்போது ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் இனி ஆண்ட்ராய்டு சாதனங்களையும் இந்த வசதியை பெறலாம் என யூடியூப் அறிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்