ரத்த காட்டேரியாக வாழும் இளைஞன்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (15:16 IST)
இங்கிலாந்தை சேர்ந்த டார்க்னெஸ் விலாட் டெபேஸ்(25) என்பவர் ரத்த காட்டேரியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.


 

 
இங்கிலாந்தை சேர்ந்த டார்க்னெஸ் விலாட் டெபேஸ்(25) கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்த காட்டேரியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் நாயுடன் வெளியே சென்றேன். அங்கு இறந்த மனிதர்களின் உடலில் வாழும் சாம்பி பெண்களை பார்த்தேன். பயத்தில் ஒடி வந்துவிட்டேன்.
 
அதைத்தொடர்ந்து ரத்தக் காட்டேரி படங்களை அதிக அளவில் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள் படித்தேன். பின்னர் நான் ரத்த காட்டேரியாக மாறுவதை உணர்ந்தேன்.
 
என் பெயருடன் டார்க்னெஸ் என்பதை சேர்த்து கொண்டேன். தற்போது தினமும் மாடு, பன்றியின் ரத்தத்தை குடித்து வருகிறேன். மனிதர்களின் ரத்தம் கிடைத்தால் அதையும் விடுவதில்லை. 
 
இறந்து போன ஆன்மா ஒன்று எனது உடம்பில் வாழ்ந்து வருகிறது. அதற்காகவே நான் ரத்தம் குடித்து வருகிறேன். நான் மற்றவர்களுக்கு ரத்த காட்டேரியாக தெரிய வேண்டும் என்பதற்காக கண்களுக்கு மை பூசி கொள்கிறேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை, என்று கூறியுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்    
அடுத்த கட்டுரையில்