உலகின் நீளமான கால்களை உடைய பெண் இவர்தான்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (05:20 IST)
ரஷ்யாவின் மிக உயரமான பெண் என்ற சாதனையை கையில் வைத்திருக்கும் 29 வயது முன்னாள் பாஸ்கட்பால் வீராங்கனை எகாடெரினா லிசினா என்பவர் உலகின் நீளமான கால்களை உடையவர் என்ற புதிய சாதனையை தற்போது பெற்றுள்ளார்.



 
 
இவர் 6 அடி 9 அங்குலம் உயரம் இருக்கும் நிலையில் 52.4 இன்ச் நீளத்தில் கால்களை கொண்டுள்ளார். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. விரைவில் இவருக்கு நீளமான கால்களை உடைய பெண் என்ற கின்னஸ் விருது கிடைக்கவுள்ளது.
 
எகாடெரினா ஒரு முன்னாள் பாஸ்கட்பால் விளையாட்டு வீராங்கனை என்பதும் கடந்த 2008ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பாஸ்கட்பால் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வீராங்கனைக்கான வெண்கலப்பதக்கம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்