எங்களுக்கு எக்ஸ்ட்ரா வரி போடுங்க! – தாமாக முன்வந்து கேட்கும் கோடீஸ்வரர்கள்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (11:27 IST)
கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் வரியை அதிகமாக்குங்கள் என உலக பணக்காரர்கள் அனைத்து நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ளன. பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதி இல்லாமையால் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் உலக பணக்காரர்கள் இணைந்த ”லட்சாதிபதிகளிம் மனிதநேயம்” என்ற அமைப்பு உலக நாடுகள் அனைத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில்லை. அவர்களுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுவதில்லை. பொருட்கள் வழங்குவதில்லை, ஆனால் எங்களிடம் ஏராளமாக பணம் உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க ஏராளமான பணம் தேவைப்படுகிறது. மருத்துவ ஊழியர்களுக்கு குறைவான அளவே சம்பளம் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் பலர் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வலிமையுள்ளவர்கள்தான் சுமையை தாங்க வேண்டும். ஆகவே எங்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துங்கள். அதுதான் நிதிநிலையை சரிசெய்ய உள்ள பிரதான வழி. பணத்தை விட மனித நேயம்தான் முக்கியம்” என கூறப்பட்டுள்ளது.

டிஸ்னி, மேரி போர்டு, ஜெரி க்ரீன்பீல்டு உள்ளிட்ட முக்கிய உலக பணக்காரர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில் எந்த இந்திய பணக்காரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்