கொரோனா பலி 53 ஆயிரமாக உயர்வு: கொரோனாவின் கோர பிடியில் உலகம்!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:37 IST)
கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 53 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக உயிர்களை பலி கொண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 53,030 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் 10,348 பேரும், பிரான்ஸில் 5,387 பேரும், அமெரிக்காவில் 6,070 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் உலக அளவில் கொரோனா உயிழப்புகள் ஒரு லட்சத்தை தாண்டிவிடும் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்