66.17 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

சனி, 24 டிசம்பர் 2022 (08:32 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.17 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.17 கோடியாக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் சீனா உள்பட ஒருசில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என பிரபல விஞ்ஞானி டெட்ராஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தற்போது பிஎப்7 என்ற கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவது குறித்து வருத்தம் தெரிவித்த விஞ்ஞானிகள், இந்தியாவை பொருத்தவரை பிஎப்7  வைரஸ் குறித்த அச்சங்கள் தேவையற்றது என்றும் இந்தியாவில் பெரிய அளவு இந்த கொரோனா பாதிப்புகள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661,071,083 ஆக அதிகரித்துள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டவர்களில் 20,531,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 633,855,427 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6,684,234 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்