உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கிவிட்டதால் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,33,080 என அதிகரித்துவிட்டது. இன்னும் 6 லட்சம் அதிகமானால் 3 கோடியை தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,32,390 என்பதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.12,64,646 என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 81,911 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 37,537 பேர்களும் பிரேசிலில் 19.089 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,749,289 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 199,000 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,027,826 என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,926,914 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 80,808 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,856,246 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,349,544 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 132,117 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,613,184 என்பதும் குறிப்பிடத்தக்கது