உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

புதன், 12 ஆகஸ்ட் 2020 (07:54 IST)
உலகம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால் விரைவில் கொரோனாவில் இருந்து முழுமையாக மக்கள் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் கொரோனா பாதிப்பு 20,500,298 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உலகம் முழுக்க 744,366 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் 13,422,539 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர் என்பதும் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
 
அமெரிக்காவில் மட்டும் 5,303,977 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 167,753 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் 3,112,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 103,099 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 2,328,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 46,188 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, கொலம்பியா, சிலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்