உலக கொரோனா பாதிப்பு: 3.63 கோடியாக அதிகரிப்பு

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (07:23 IST)
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்வு என்றும், கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவிற்கு 1,05,554 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர் என்றும் இந்தியாவில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 25,81,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் நாடு முழுவதும் 9,02,972 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,776,224ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவிற்கு 216,784 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து 4,983,380 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,002,357ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவிற்கு 148,304 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து 4,391,424 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்