நடிகைகள் மற்றும் இளம்பெண்கள் மார்பகத்தை எடுப்பாக மாற்ற சர்ஜரி செய்வது வழக்கமே. சர்ஜரிக்கு பின்னர் ஏராளமான பெண்கள் கவர்ச்சியான மார்பகங்களை பெற்றிருந்தாலும், ஒருசிலருக்கு இந்த அறுவை சிகிச்சை சோதனையாக முடிந்துவிடுவதுண்டு.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேட்டி ஜோன்ஸ் என்ற பெண் கணவரின் வற்புத்தலுக்கு இணங்கி மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அவரது மார்பக பகுதிகளில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கோப்பைகள் திருப்ப தொடங்கியதால் அவரது மார்பகங்கள் தற்போது இயற்கையான வடிவத்தைவிட்டு சதுரமாக மாறிவருகிறது. இன்னும் ஒரிரு நாட்களில் அவரது மார்பகங்கள் முழுமையான சதுரமாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இனி எதுவும் தங்கள் கையில் இல்லை என்றும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்தால் அந்த பெண்ணின் மார்பகம் 70 வயது பெண்ணின் மார்பகங்கள் போல் மாறிவிடும் என்றும் கூறிவிட்டனர். இதனால் கேட்டி ஜோன்ஸ் மட்டுமின்றி அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.