பயங்கரவாதிகள் ஆதரவுடன் பாகிஸ்தான் அமெரிக்காவை எதிர்க்கிறது: முன்னாள் ராணுவ அதிகாரி

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (17:00 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஆதரவுடன் பாகிஸ்தான் அமெரிக்காவை எதிர்க்கிறது என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி லாரன்ஸ் செலின் தெரிவித்துள்ளார்.

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சு தொடங்கிய பின்னர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான் ஐஎஸ்ஐ ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை  வழங்கியது..
 
அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் பெர்வெஸ் முஷாரஃப், தலிபான் மற்றும் அல் கொய்தாவிற்கு எதிரான யுத்தம் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவாது என்றார்.
 
பாகிஸ்தான் இரட்டிப்பு நிலை பதினேழு வருடங்கள் தொடர்ந்தது. இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை ஏற்றுக் கொண்டாலும், ஆப்கானிஸ்தானில் தலிபான், ஹக்கானி நெட்வொர்க் மற்றும் இதர பயங்கரவாத குழுக்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் அமெரிக்காவை எதிர்க்கிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்