ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ ! சூழும் வெள்ளம் !

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:13 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் வெள்ளக்காடாகி வருகிறது.  சில நாட்களுக்கு முன் தீடீரென குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பற்றிய தீ குபுகுபுவென பரவிவருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 
ஆஸ்திரேலிய நாட்டின் வட கிழக்கு பகுதியில் உள்ளது குயின்ஸ்லாந்து. இங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த வாரம் காட்டுத்தீ பற்றியது. அது வனமெங்கிலும் வேகமாக பரவிவருவதாக செய்திகள் தெரிவிக்கிம்ன்றன. மேலும் அந்தப் பகுதில் நிலவும் வறண்ட வானிலியே காட்டுத் தீ பரவ காரணம் எனவும் கூறப்படுகிறது. அரசு ஹெலிகாப்டர் மூலம் நீர் இறைத்து தீயை அணைக்க முயற்சி எடுத்து வருகிறது.
 
இந்தக் காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு அரசு தீயணௌப்பு வீரர்களைக் கொண்டு கடுமையாக போராடி வருகிறது.
 
ஆனால் இதுவரைக்கும் இக்காட்டுப்பகுதியில் பல நூறு ஹெடேக்கர் பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. கார்மில் வின்பைல்ட், டார்லிம்ஸ் போன்ற பகுதிகள் அதிகமாக பதிப்படைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
காட்டுத்தீ ஒருபக்கமாய் வருத்தி எடுக்க சிட்னி நகரில் என்றுமில்லாத வகையில் வெள்ளம் சூழ்ந்து  இதுவரையில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்