தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து! – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “பல நாடுகளில் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்