ஜனவரி 19ம் தேதி பூஸ்டர் தடுப்பூசி பற்றி WHO ஆலோசனை?

சனி, 15 ஜனவரி 2022 (14:35 IST)
ஜனவரி 19ம் தேதி பூஸ்டர் தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும், 60 வயது மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசை செலுத்தியுள்ளன. அதிலும் இஸ்ரேல் போன்ற நாடுகள் 4வது டோஸ் தடுப்பூசியையும் பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஜனவரி 19ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என்று ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்