பொங்கல் பண்டிகை; ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை!

சனி, 15 ஜனவரி 2022 (12:43 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 

 
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க புதிய கட்டுப்பாடுகளையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.
 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டல வாரியாக பார்க்கையில் சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், திருச்சியில் ரூ65.52 கோடிக்கும், சேலத்தில் ரூ63.87 கோடிக்கும், மதுரையில் ரூ68.76 கோடிக்கும், மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்