கூகுளின் அடுத்த சிஇஓ யார் ? இளைஞர் ஆயிரக்கணக்கானோர் போட்டி !

புதன், 31 ஜூலை 2019 (16:58 IST)
உலகில் உள்ள இணையதளங்களில் கூகுள் நிறுவனம் புகழ்பெற்று விளங்கினாலும் கூட, இந்தியரான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் சிஇஓ ஆன பிறகுதான், இந்தியர்களிடம் ஒரு இணக்கம் ஏற்பட்டது, அது தமிழர்களிடன் இன்னும் இணக்கமாகவும் பெருமையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட் இன் (linked in ) இணையதளத்தில் பல்வேறி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக இருப்பதாக ஒரு விளம்பரம் வெளியானது.
 
இந்தப் பதவியில் தற்போது சுந்தர் பிச்சை சிறப்புடன் பணியாற்றி வரும் வேளையில், இந்த விளம்பரம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பல்லாயிரக்காண இளைஞர்கள் இப்பதவிக்கு விண்ணபித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த மைக்கேல் ரிஜிண்டர்ஸ் தான் இந்த பொய்யான் விளம்பரத்தை வெளியிட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது.
 
இந்நிலையில்  linkedin இணையதளத்தில் பல பொய்யான வேலைவாய்ப்புகள் குறித்து விளம்பரம் செய்யப்படுவதை நிரூபிக்கத்தான் இந்ந்த விளம்பரத்தை பதிவிட்டதாக  நெதர்லாந்தை சேர்ந்த மைக்கேல் ரிஜிண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்