இன்றைய நவீன காலத்தில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை திறக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவந்தாலும் கூட அதில் பல குறைபாடுகள் உள்ளதாக பயனாளர்கள் குறை கூறினர். இந்நிலையில் வரும் அக்டோபரில் சந்தைக்கு வரும் என பயனாளர்கள் எதிர்பார்த்துள்ள பிக்ஸல் 4 மற்றும் பிக்ஸல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட் போன்களில் குறைகள் எதுவும் இருக்காது என கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமெரிகாகவில் உள்ள சாலையில் செல்வோரிடம் சென்று, ஸ்மார்டை போனை அவர்களின் முக அடையாளத்தைப் பயன்படுத்தி செய்துவருகிறது. இந்த சோதனைக்காக ஒவ்வொருவருக்கும் சுமார் 5 டாலருக்கான சான்றிதழை ( இந்திய மதிப்பிஉல் 350 ரூபாய் ) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.