கரை ஒதுங்கிய இந்த வெள்ளை உருளைகள், என்னவென்று தெரியுமா?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (12:02 IST)
சைபீரியா கடற்கரையில் திடீரென தோன்றிய வெள்ளை  உருளைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 


 
 
வடமேற்கு சைபீரியவின் ஒபி வளைகுடா கடற்பகுதி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையாகும். இங்கு கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் இளைஞர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் காலை கடற்கரைக்கு வந்த மக்கள் கரையோரத்தில் ஒதுங்கியிருந்த மெகா சைஸ் உருண்டைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். யாரோ செய்து வைத்தது போல் உள்ள அந்த உருண்டைகளை தொட்டு பார்க்கவே அச்சப்பட்டனர். 
 
பயம் தெளிந்த சிலர் அவற்றை கையில் எடுத்து பார்த்தப்போது அவை பனிக்கட்டி உருளைகள் என தெரியவந்தது. 
 
கடற்கரை முழுவதும் 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுக்கி வைத்ததுபோல் காணப்பட்ட பனிக்கட்டி பந்துகளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வியப்புடன் பார்த்துச்சென்றனர். 
 
கடற்கரையை ஒட்டிய நைடா கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் இதுபோன்று பனிக்கட்டி உருண்டைகள் ஒதுங்கி பார்த்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்