இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

Prasanth Karthick

ஞாயிறு, 4 மே 2025 (18:14 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து போர் மிரட்டல்களை விடுத்து வருகிறது.

 

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் போர் பயிற்சியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகள் இடையேயான போர் பதற்றத்தை குறைக்க, பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

 

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து சமீபத்தில் ரஷ்யா டுடே ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, இந்திய ஊடகங்கள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பேசியுள்ளார். மேலும், இந்தியா தாக்குதல் நடத்தினால், மீண்டும் இந்தியாவை வழக்கமான ஆயுதங்கள் தொடங்கி அணு ஆயுதங்கள் வரை சகல ஆயுதங்களிலும் தாக்குவோம் என அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்