மனித சாம்பல் கொண்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (12:55 IST)
நியு மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலில் இருந்து பாத்திரங்களைச் செய்கிறார். 


 
 
ஒரு புராஜக்டுக்காக இந்தச் சாம்பல் பாத்திரங்களை உருவாக்கியவர், நண்பர்களின் ஆலோசனையால் இதைத் தொழிலாக மாற்றிக்கொண்டார். ‘க்ரானிகல் க்ரிமேஷன் டிசைன்’ என்ற பெயரில், மனிதச் சாம்பலில் இருந்து காபி கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறார். 
 
மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளை பயன்படுத்துவது தான் இந்த திட்டம். தங்கள் அன்புக்குரியவர்களின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை, தங்களுடன் வைத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினார்கள். இறந்தவர்கள் பாத்திரங்கள் மூலம் தங்களுடனே இருக்கிறார்கள் என்ற திருப்தி பலருக்கும் கிடைத்திருக்கிறது. முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்