3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

Senthil Velan

சனி, 1 ஜூன் 2024 (15:27 IST)
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மூன்று நாள் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளூர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
 
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதி கட்ட தேர்தலானது நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தார். பின்னர் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார். காவி உடை அணிந்து தியானம் மேற்கொண்டு வந்த பிரதமர் மோடி, தனது மூன்று நாள் தியானத்தை இன்று நிறைவு செய்தார்.

ALSO READ: சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

பின்னர் திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து படகில் கரை திரும்பிய பிரதமர் மோடி,  ஹெலிகாப்டர் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்