அமெரிக்காவில் கிராப்ட் ஹெய்ன்ஸ் என்ற உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் 3.30 நிமிடங்களில் தயாராகிவிடும் என விளம்பரப்படுத்தி பாஸ்தா விற்பனை செய்து வருகிறது. இந்த பாஸ்தாவை புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் அமெண்டா ரமிரெஸ் என்ற பெண் வாங்கி சமைத்துள்ளார். ஆனால் அது மூன்றரை நிமிடத்தில் தயாராகவில்லை என்றும், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பொறுமையிழந்த அந்த பெண் கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் கிராப்ட் ஹெய்ன்ஸ் விளம்பரப்படுத்துவது போல பாஸ்தா மூன்றரை நிமிடங்களில் தயாராவதில்லை என்றும், இதனால் போலியான விளம்பரம், வாக்குறுதியை அளிக்கும் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனக்கு ரூ.40 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.