டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி.. அமெரிக்கா எச்சரிக்கை..!

Mahendran

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (16:54 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை நாளை அலாஸ்காவில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான சூழ்நிலையில், அமெரிக்க நிதித்துறை செயலாளர் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, அமெரிக்கா இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவு அமெரிக்காவிற்கு சாதகமாக அமையாவிட்டால், இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதன் மூலம், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கக் கூடாது என்று அமெரிக்கா மறைமுகமாக வலியுறுத்துவதாக கருதப்படுகிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, இந்த போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.
 
நாளை நடைபெறவுள்ள ட்ரம்ப்-புடின் சந்திப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும், அரசியல் ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வி, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார கொள்கைகளில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த சந்திப்பை அமெரிக்கா மட்டுமன்றி, உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்