மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

Mahendran

வியாழன், 23 அக்டோபர் 2025 (11:35 IST)
பிரதமர் நரேந்திர மோடி, மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் நேரில் கலந்துகொள்வதை தவிர்த்தது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
 
வரும் அக்டோபர் 26 முதல் 28 வரை மலேசியாவில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை, தீபாவளியை காரணம் காட்டி மோடி தவிர்த்துள்ளார் என்று மலேசிய பிரதமர் அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதனை மறுத்துள்ளார்.
 
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோலாலம்பூர் மாநாட்டிற்கு மோடி செல்லாததன் உண்மை காரணம், டிரம்ப்பிடம் "மாட்டிகொள்ள விரும்பவில்லை" என்பதே என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 "ஆபரேஷன் சிந்தூரைத்தடுத்தது" போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து டிரம்ப் நேரில் கேள்விகள் எழுப்பக்கூடும் என்பதால், அந்த சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்ததாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது மோடிக்கு 'ஆபத்தானது' என்றும் அவர் விமர்சித்துள்ளார். 
 
மோடி காணொலி காட்சி மூலம் மட்டுமே மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்