டிரம்ப் மிரட்டலையும் மீறி இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை

Siva

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (09:39 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக மிரட்டல்களையும் மீறி, இந்தியப் பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
எனினும், இந்த ஏற்றம் மிகக் குறைவாக இருப்பதால், எந்த நேரத்திலும் சந்தை சரியக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 20 புள்ளிகள் உயர்ந்து, 80,564 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து, 24,035 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்றைய வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. 
 
அதேசமயம், பஜாஜ் ஆட்டோ, எச்.சி.எல் டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஜியோ பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா போன்ற பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்