கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

Siva

வியாழன், 23 அக்டோபர் 2025 (10:42 IST)
கூகுள் நிறுவனம் புதியதாக கண்டுபிடித்துள்ள புதிய 'குவாண்டம் எக்கோஸ்' (Quantum Echoes) அல்காரிதம், மூலக்கூறுகளின் கட்டமைப்பை துல்லியமாக அளவிட உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, புதிய பொருட்களை அடையாளம் காணும் பொருள் அறிவியல் (Material Science) ஆகிய துறைகளில் ஒரு முக்கிய சகாப்தத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது, கூகுள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய 'வில்லோ' குவாண்டம் சிப்பின் முக்கியத்துவத்துக்கு இணையானது என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்யும் குவாண்டம் கணினி துறையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
 
இந்த அல்காரிதத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்ற குவாண்டம் கணினிகள் மூலமாகவும் சரிபார்க்கக்கூடியது ஆகும். 
 
மேலும், லைஃப் சயின்சஸ் போன்ற துறைகளில் ஏ.ஐ. மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க தேவையான துல்லியமான தரவு தொகுப்புகளை உருவாக்கவும் இந்த அல்காரிதம் உதவும் என்று கூகிள் நம்புகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்