உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

Siva

புதன், 6 ஆகஸ்ட் 2025 (17:11 IST)
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒன்றில், "நீங்கள் உண்மையிலேயே இந்தியரா?" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி அளித்த கருத்துக்கள், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுவதால், அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்று பா.ஜ.க. எம்.பி. மனன் குமார் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
 
உண்மையான இந்தியர் யார் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது" என்று பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.  மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை நீதிமன்றம் எப்படி விமர்சனம் செய்யலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக மனன் குமார் மிஸ்ரா தெரிவித்தார். இந்த மனுவை தங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் விரைவில் தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நாட்டின் மக்கள் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வழக்கு, அரசியல் தலைவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் நீதிமன்றத்தின் மாண்பு ஆகிய இரண்டுக்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் ஒருமுறை தொடங்கி வைத்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்