இதுவரை தோல்வி அடையாத குத்துச்சண்டை வீரர் தீடீர் மரணம் !

வியாழன், 19 மே 2022 (19:21 IST)
தான் விளையாடிய குத்துச் சண்டை போட்டியில் தோல்வி அடையாத வீரர் மூசா யாமக் போட்டியின்போது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 38 வயதான மூசா யாமக். இவர் மூனிச்சில் நடந்த போட்டியில் உகாந்த வீரர் ஹாம்சா வாண்டதராவுடன் மோதினார்.

இந்தப் போட்டியில், 3 வது சுற்றின்போது,குத்துச் சண்டை வளையத்தில் மூசா மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருந்துவர்கள் அவரைச் சோதித்தனர்.  அவருக்கு மாரடைப்பு என தெரியவந்ததை அடுத்து, அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்ம் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

குத்துச்சண்டை வீரர் மூசா யாமக், இதுவரை கலந்து கொண்ட 8-0 என்ற கணக்கில் யாராலும் தோற்கடிக்கப்படாத வீரராகவும், யாமக் ஐரோப்பிய ஆசிய சேம்பியன் பட்டங்கள் வென்றவராகவும் இருந்தார். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்