சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

Siva

புதன், 6 ஆகஸ்ட் 2025 (16:58 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். 2019-க்குப் பிறகு அவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
 
SCO மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன், பிரதமர் மோடி ஆகஸ்ட் 30 அன்று ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் வருடாந்திர இந்தியா-ஜப்பான் மாநாட்டில் பங்கேற்கிறார்.அதன்பிறகு, அங்கிருந்து அவர் சீனாவிற்குப் புறப்படுகிறார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், இந்த அமைப்பு டாலரின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுப்பதாகவும் விமர்சித்து வருகிறார். இந்தச் சூழலில், பிரதமர் மோடி SCO மாநாட்டில் பங்கேற்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து அமெரிக்காவை எதிர்த்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்