தைரியமான ஆளா இருந்தா கிறிஸ்துமஸ் பரிசு குடுங்க பாப்போம்! ட்ரம்ப் சவால்!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:58 IST)
வடகொரியா கிறிஸ்துமஸ் பரிசு அனுப்புவதாக அனுப்பிய மிரட்டலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நீண்ட நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. அதற்கேற்றார் போல் ஐ.நா.சபையின் கட்டுப்பாட்டையும் மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் – னும் சந்தித்து பேசியதை அடுத்து இந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ட்ரம்ப் மறுத்ததால் நிலைமை மோசமாகியுள்ளது.

மீண்டும் அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணை தொழிற்சாலையை தொடங்கியுள்ள வட கொரியா, அமெரிக்காவுக்கு ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளது.

அமெரிக்க நாட்டிற்கு ஒரு ஆச்சர்யமான கிறிஸ்துமஸ் பரிசு காத்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ”உங்களால் முடிந்தால் அந்த பரிசை அனுப்புங்கள். அது எதுவாக இருந்தாலும் எங்களால் கையாள முடியும். ஒருவேளை அது அழகிய ஜாடியாக கூட இருக்கலாம்” என கிண்டலடிக்கும் தோனியில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்