இனிமேல் ஒரு பய இங்க இருக்க கூடாது.. கிளம்புங்க! – சீன தூதரகத்தை மூடிய ட்ரம்ப்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (11:18 IST)
அமெரிக்க ஆவணங்களை திருடியதாக சீன தூதரகங்களை மூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – சீனா இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பொருளாதார ரீதியாகவும், கொரோனா பரவல் தொடர்பாகவும் அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீன தூதரகம் அறிவு திருட்டில் ஈடுபடுவதாக அதை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சீன அதிகாரிகள் அமெரிக்காவிடமிருந்து திருடிய பல்வேறு ஆவணங்களை கொளுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட 72 மணி நேரத்திற்குள்ளாக மூட உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வகங்களில் தகவல்களை திருட சீனா ஹேக்கர்களுக்கு நிதியளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளதுடன், இது மூர்க்கத்தனமானது மற்றும் நியாயமற்றது என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்