கொரோனாவுக்கு பிறகு இதயநோய் பலி அதிகரிப்பு! – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:25 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய முதல் ஆண்டிலேயே இதயநோயால் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 2019 இறுதி வாக்கில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் அமெரிக்காவும் பல மாதங்கள் முடங்கி போனது. 2020ம் ஆண்டு வரலாறு காணாத பொதுமுடக்கத்தை உலக நாடுகள் அமல்படுத்தின. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடங்கிய 2020ம் ஆண்டில் இதயநோயாள் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இதயநோயால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,74,613 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை அடுத்த 2020ம் ஆண்டில் 9,28,741 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 6.2 சதவீதம் அதிகம்.

ஏற்கனவே நீரிழிவு நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா காலத்தில் மரணமடைந்ததாக தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்