சுவரை தாண்டினா அவ்வளவுதான்! – அமெரிக்காவை மிரட்டும் மெக்ஸிகோ!

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (16:34 IST)
எந்த மெக்ஸிகர்கள் உள்ளே நுழையக் கூடாது என அமெரிக்கா சுவர் எழுப்பியதோ, அந்த சுவரே தற்போது அமெரிக்காவுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மற்ற நாடுகளை விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். சீனா, இத்தாலி போன்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனால் வரும் காலங்களில் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு அருகே உள்ள மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் அமெரிக்கா அளவுக்கு அதிகமாக இல்லாத சூழல் உள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் உள்ள சிலர் சட்ட விரோதமாக மெக்ஸிகோவுக்குள் நுழைவதாக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற போது அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதாக அறிவித்தார். பாதி கட்டியும் கட்டாமலும் உள்ள அந்த எல்லையை கடக்க முயன்று இதுவரை பல மெக்ஸிக மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி அமெரிக்கர்கள் மெக்ஸிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்