சிரியா மற்றும் ஈராக் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (09:32 IST)
சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தகவல். 

 
ஆம், சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக தெரிகிறது. 
 
கடந்த 5 மாதங்களில், ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா நடத்தும் 2 ஆவது தாக்குதல் இதுவாகும். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்