பழி தீர்த்த அமெரிக்கா: தாக்குதலுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி மரணம்!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:21 IST)
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேபோல காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
சொன்னபடி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா.  இதனிடையே தற்போது காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொல்லப்பட்டார். நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்