ஈரானில் அரை நிர்வாணத்துடன் போராடிய பெண் கைது: எச்சரிக்கை செய்த ஐநா..!

Mahendran
திங்கள், 4 நவம்பர் 2024 (10:10 IST)
ஈரான் நாட்டில் அரை நிர்வாணத்துடன் போராடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஐநா சபை ஈரான் நாட்டை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

இதனை அடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஹிஜாப் கட்டுப்பாடு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த பெண்ணை கைது செய்ததற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தை கண்காணிப்பது மட்டுமின்றி உரிய விசாரணை நடத்தி அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணுக்கு ஐநா சபை உள்பட பல அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஈரான் நாட்டிற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்