10 நாட்கள் போரில் 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி! – உக்ரைன் தகவல்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (15:35 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில்  பதில் தாக்குதலில் 11 ஆயிரம் ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவை விட ராணுவ பலத்தில் உக்ரைன் குறைவாக இருக்கும்போதிலும் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நாளை உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் குறித்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இன்று போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 நாட்களாக தொடர்ந்து நடந்த உக்ரைனின் பதில் தாக்குதலில் 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்