உக்ரைனில் எமெர்ஜென்சி; வான்வெளி மூடப்பட்டது! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:25 IST)
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு வான்வெளி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவதாலும், உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாலும் உக்ரைனில் போர் எழும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று ஏர் இந்தியா விமானம் உக்ரைன் சென்று 242 இந்தியர்களை மீட்டு வந்தது. மேலும் இரண்டு முறை உக்ரைன் செல்ல ஏர் இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வான்வெளி எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் எந்த நாட்டு விமானமும் உக்ரைன் செல்ல முடியாது என்பதால் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்