அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது ஏலியன்களின் பறக்கும் தட்டா? – அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:37 IST)
சமீப காலமாக அமெரிக்க வான்பரப்பில் தோன்றி வரும் உளவு பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று அமெரிக்காவின் ராணுவ அணு சக்தி தளம் மீது பறந்து சென்ற உளவு பலூன் ஒன்றை கடல் பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேநாளில் அலாஸ்காவிலும் மர்ம பொருள் ஒன்று தோன்ற அதையும் அமெரிக்க வான்படை சுட்டு வீழ்த்தியது.

அதன்பின்னர் அண்டை தேசமான கனடாவிலும் பறக்கும் பொருள் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இவ்வாறான பறக்கும் பொருட்கள் தோன்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



இந்நிலையில் நேற்று மிச்சிகன் மாகாணத்தின் மேல் எட்டுக்கோண வடிவத்தில் பறந்த வித்தியாசமான ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆரம்பம் முதலே இவை சீனாவின் உளவு பலூன்கள் என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா அதை மறுத்து வந்தது.

இந்நிலையில் மிச்சிகனில் எட்டுக்கோண வடிவத்தில் தோன்றிய பொருள் ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என்ற கருத்து மக்களிடையே எழுந்துள்ளது. Unidentified Flying Object என அது கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த பறக்கும் பொருள் தோன்றிய இடமான மிச்சிகனின் ஏரி பகுதி முழுமையாக மூடப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடையாளம் காணமுடியாத வித்தியாசமான பறக்கும் பொருட்கள் அமெரிக்காவில் தோன்றுவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்