ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து இரு இளைஞர்கள் உலகசாதனை

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (22:05 IST)
ஹெலிகாப்டரில் அதிக புல் அப்ஸ் எடுத்து இரு  இளைஞர்கள் சாதனை படைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் ஸ்டான் பிரவுனி ,அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகிய  இருவரும் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

இவர்கள் வித்தியாசமாகச் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரில் தொங்கி அதிக புல் அப்ஸ் எடுத்துச் சாதனை படைத்துள்ளனர்.

பெல்ஜியத்தின் ஆன்ட்வெப்பில் உள்ள ஹொவெனன என்ற விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் சில அடி உயரத்தில்  ஒரே நிலையில் அசையாமல் பயந்து கொண்டிருந்தது. அப்போது, அதன் தரையிறங்கு கம்பியைப் பிடித்துக் கொண்டு அர்ஜென் ஆல்பர்ஸ்  ஒரு   நிமிடத்தில் 24 முறை புல் அப்ஸ் எடுத்துச் சாதனை படைத்தார்.

இதையடுத்து ஸ்டான் புரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி 1 நிமிடத்தில் 25 முறை புல் அப்ஸ் எடுத்தார்.

இதற்கு முன் அர்மேனியாவின் ரோமன் என்பவர் 1 நிமிடத்தில் 23 முறை புல் அப்ஸ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்