அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நடப்பு அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் சமீபத்தில் அவரது ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது ட்ரம்ப் உபயோகத்தில் இருந்து வரும் நிலையில் அந்த கணக்கு திரும்ப பெறப்பட்டு அடுத்த அதிபரான ஜோ பிடனிடம் ஜனவரி 20ம் தேதியன்று ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.